தமிழர் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு உணவு திருவிழா
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளியில் நேற்று (15 ஆவது ஆண்டு ) தமிழர் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருமூலர் திடலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மரபுவழி மருத்துவர் மற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.கோ.நம்மாழ்வார் அவர்களுடன் 10 ஆண்டுக்குமேல் இணைந்து மட்டுமல்ல இசைந்து அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை நன்கு பார்த்துக்கொண்டவர் என் இனிய நண்பர் திருமிகு.ஏஞ்சல்ஸ்ராசா அவர்கள் தலைமையில் சிறப்பாக துவங்கியது.

இந்நிகழ்விற்கு வாழ்த்துரை வழங்கவும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பாராட்டவும் என்னை அழைத்திருந்தார் பள்ளியின் தாளாளர் திருமிகு.வெற்றி செழியன் அவர்கள்.
_resized.jpg)
150 பள்ளி மழலையர்கள் அவர்களின் பெற்றோர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து 50 தமிழர் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு உணவுக் கடைகளை சிறப்பாக அமைத்திருந்தார்கள், இதில் 100 க்கும் மேற்பட்ட நஞ்சில்லாத ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தி, வாங்கி உண்ணவும் வழிவகை செய்திருந்தார்கள். அருமையான இந்நிகழ்வின் சிறப்பு தன்மை... உணவின் பெயர் என்ன,அதை எப்படி செய்யவேண்டும், அதன் பயன் என்ன என்று எழுதிவைத்து பார்வையாளர்களுக்கு செய்முறை விளக்கவும் தந்தார்கள்.

இனிமையான இந்நிகழ்வில் மேலும் சுவை சேர்க்கும் விதத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்கள் எங்கள் திருவருள் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற கலப்பணியில் பங்கேற்ற நீண்டநாள் நண்பர்கள் திருமிகு.பசுமை நாயகன் அவர்களையும், திருமிகு. முனைவர் முருகேசன் அவர்களையும் மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழி பள்ளியின் தாளாளர் திருமிகு.வெற்றி செழியன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழர் நலன்காக்க அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும்.... திருவருள் பவுண்டேஷன் சார்பில் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறோம்.
_resized.jpg)

_resized.jpg)

(இத்த அருமையான தமிழர் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்விற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் திருமிகு.பாமயன் அவர்கள் எழுதிய அன்மையில் வெளிவந்த திணையியம் -தமிழின் ஆதி மெய்யியல் பனுவலை திருவருள் பவுண்டேஷன் சார்பில் அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தது திருவருள் பவுண்டேஷன்.)
நன்றி
சு.வாசு,
திருவருள் பவுண்டேஷன்.
www.thiruvarul.org