திருமுறைகளை படித்தால் அனைத்து செல்வங்களையும் பெறலாம் - தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் காஞ்சி திருமுறை திருவிழாவில் அருளாசி வழங்கினார்.
தேமதுர தமிழிசையாம் திருமுறை இசைக்கு சிறப்பு சேர்கும் விதமாக அமைந்திருந்தது காஞ்சி திருமுறை திருவிழா 2026.

சோழநாடு சோறுடைத்து, தொண்டை நாடு சான்றோர் உடைத்து என சிறப்பு பெயர் இரண்டு நாடுகளுக்கும் உண்டு, இதில் சோழநாடு உடலுக்கு பலம்சேர்கிற உணவை ( நெல்லை விளைவிக்கிறது), தொண்டைநாடு உயிர்க்கு பலம்சேர்கிற அறிவாளர்களை ( கற்றறிந்த சான்றோர்களை) உருவாக்குகிறது.
இது மட்டுமல்லாமல் 11ஆம் நூற்றாண்டில் நகரம் என்ற சிறப்பு பெயர் பெற்றது இரண்டு நகரங்கள் மட்டுமே... ஒன்று சோழநாட்டில் உள்ள *திருவாரூர் மாநகர், இரண்டாவது தொண்டை நாட்டில் உள்ள காஞ்சி மாநகர், ( என்று தெய்வப்புலவர் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார் ) இரு நகரங்களும் மண் தத்துவமாக திகழ்கிறது.
இவை இரண்டு நகரங்களும் தமிழ்நாட்டிற்கு கண்போன்றது என்று உணர்த்தவே பெருமான் ஆலால சுந்தரருக்கு இரண்டு கண்பார்வையையும் ஒளிஇழக்க செய்து, மீண்டும் ஒளி பெற அருளிய தளங்களில் *ஒன்று காஞ்சிபுரம் ( இடது கண்) மற்றொன்று திருவாரூர் ( வலது கண்)
இது போன்று இரண்டு நாடுகளுக்கும் இரண்டு நகரங்களுகும் ஒற்றுமைகள் பல புதைந்துள்ளது,
அதை மீண்டும் நிருபிக்கும் வகையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டின் பேரரசன் இராசராசன் தொகுத்து ஒலிக்க செய்த திருமுறைகளை , தொண்டை நாட்டின் அங்கமாகிய சென்னையில் 2023ல் மீட்டெடுத்து 108 ஓதுவார்களை வைத்து, 108 கைலாய வாத்தியங்களை வைத்து, 108 திருமுறை பேழைகளை வைத்து, திருமுறையிசையை தமிழ்நாடு மட்டுமல்லாது...கைலாயம் வரை ஒலிக்க செய்தது திருவருள்,
இதன் மறுமலர்ச்சியாக, தமிழிசையின் எழிச்சியாக, இளைய தலைமுறையினர் இணைந்த கரங்கலாக,
மூன்றுநாள் நிகழ்வாக முப்பெருவிழாவாக, ஒருங்கிணைந்து, மீண்டும் தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரில் திருமுறைகளை உரக்க ஒலிக்க வகைசெய்தது திருவருள்,
இந்நிகழ்வை சிறப்பாக நடத்தி, நிறைவு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல...
நற்சிந்தனைகளையும்
நற்சேவைகளையும் வீரிய விதயாக்கி
விதைத்தவன் உறங்கலாம்
ஆனால்
விதைகள் உறங்குவதில்லை என்பதற்கு ஏற்ப,
மிக சிறப்பாக அமைந்திருந்தது
காஞ்சி திருமுறை திருவிழா 2026,
இதுபோன்று தமிழ்மணம் கமழும் தமிழிசையாம், திருமுறையிசை விழாக்கள்
உலகளவில் பரவி, பல்கி, பெருகி, நடைபெற.....
திருவருளை வேண்டுகின்றேன்.
நன்றி,
சு.வாசு,
திருவருள் பவுண்டேஷன், சென்னை.
www.thiruvarul.org