தமிழின் பிரதான மூலக்கூறுகள் மூன்று, அவை இயல், இசை & நாடகம் எனும் கூறுகள்.
இவை வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் பார்த்தால் நாடகம், இசை & இயல் என்று வகைப் பட்டிருக்கும், இவற்றில் எப்படிப் பார்த்தாலும்,இசை நடுநாயகமாக வீற்றிருப்பது சிறப்பு மட்டுமல்ல இயல் தோன்றுவதற்கே இசையே காரணமாக இருந்தது என்பது தொன்மை வரலாறு,

பாணர்கள் என்பவர்கள் தமிழரின் வாழ்வியல் மரபுகளை ஒரு இடத்தில் பார்த்த அல்லது வழக்கில் உள்ள செய்திகளைச் செவிவழியாகக் கேட்டு, அவற்றை இசை வடிவில் இயற்றி பல ஊர்களுக்குப் போய், மரபு கருத்துக்களைப் பாடியும், இசையோடு தமிழையும் இணைத்து வளர்த்து வந்தார்கள், பாணர்கள் பாடிய அல்லது வகுத்த இசையே பண்ணிசை என்ற தமிழ் இசை மரபு, இந்த மரபிலிருந்துதான் தமிழ் இயல் (தமிழ் இயல் இலக்கணம் )தோன்றக் காரணமாக இருந்தது என்பது துணிபு.

தமிழ் மொழி உலக மொழிக்கு எல்லாம் தந்தை மொழி என்று அருட்பிரகாச வள்ளல் பெருமான் கூறியது போல், உலக இசைக்கு மூலம் தமிழிசையே என்று தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் செய்த ஆராய்ச்சியின் முடிவு ( கருணாமிர்த சாகரத் திரட்டு).

இப்படிப்பட்ட தமிழ் பண்ணிசை மரபின் சாரமாக, இன்றும் நம்மிடம் இருக்கும் கருவூலம் பன்னிரு திருமுறைகள், இவற்றை அருளிய 27 அருளாளர்கள் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடத்தில் தோன்றி ஆற்றிய அற்புத படைப்பு, இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த பன்னிரு திருமுறைகளை எந்த வடிவிலும் எந்த காலகட்டத்திலும் எந்த சூழலிலும் பாதுகாப்பது தமிழர்களின் தலையாய கடைமை.....

தமிழ் பண்ணிசையின் எழுச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் எடுக்கும் எந்த முயற்சியும், நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்ததே... குருவருளும் திருவருளும் இணையப்பெற்றதே.

நன்றி,
சு.வாசு,
திருவருள் பவுண்டேஷன்,
சென்னை.
www.thiruvarul.org