தமிழர் பாரம்பரிய நஞ்சில்லா உணவுத் திருவிழா

வடபழனி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடத்தப்படும் *தமிழர் பாரம்பரிய நஞ்சில்லா உணவுத் திருவிழாவின்* இரண்டாம் ஆண்டு துவக்கவிழா பள்ளி வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது, 

இந்நிகழ்வில் 350 பள்ளி மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியில் தமிழர் பாரம்பரிய நஞ்சில்லா உணவு மற்றும் தமிழர் வாழ்வியல் பண்பாட்டு கூறுகளை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் ஒரு அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது, *இத்தருணத்தில் திருவருள் பவுண்டேஷன் சார்பில் பதிப்பித்து வெளியிட்ட கயா ( பூமித்தாயின் மரண சாசனம்) என்ற பனுவல் மாணவர்களுக்காக பள்ளியின் இயக்குநர் திரு.செல்வராஜ் ஜயாவிடம் வழங்கப்பட்டது மேலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இயற்கை ஆர்வலர் திரு.பாமையன் எழுதி அண்மையில் வெளிவந்த திணையியம் பனுவல் அறிமுகப்படுத்தப்பட்டது.*

இத்தகையை அறிய வாய்பை வழங்கிய பள்ளி நிறுவனர், தலைவர் மற்றும் இயக்குநர் ஆகியோர்க்கு நன்றி தெரிவித்து, அடுத்த இளம் தலைமுறையினரான மாணவர்களை வாழ்த்தி மகிழ்வதில் திருவருள் பவுண்டேஷன் பெருமையடைகிறது.


நன்றி,

சு.வாசு,

நிறுவனர்,

திருவருள் பவுண்டேஷன், சென்னை.

www.thiruvarul.org